வித்யா விகாசினி பள்ளி அணி அபாரம்| Sports | Beach volleyball| Champions|
வித்யா விகாசினி பள்ளி அணி அபாரம்| Sports | Beach volleyball| Champions| திருப்பூர் தெற்கு குறுமைய பீச் வாலிபால் போட்டி ராக்கிபாளையம் வித்ய விகாஷினி மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடந்தது. போட்டிகளை முருகப்பா செட்டியார் பள்ளி தலைவர் வீரா செந்தில் மற்றும் வித்ய விகாசினி மெட்ரிக் பள்ளி செயலாளர் நகுலன் பிரணவ் துவக்கி வைத்தனர். ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவில் போட்டி நடத்தப்பட்டது ஜூனியர் பிரிவில் பிரண்ட்லைன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியை வித்ய விகாஷினி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். சீனியர் பிரிவிலும் பிரண்ட்லைன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியை வித்ய விகாஷினி பள்ளி அணியினர் 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர். சூப்பர் சீனியர் பிரிவில் வேலவன் மெட்ரிக் பள்ளி அணியை 2-0 என்ற செட் கணக்கில் வித்ய விகாஷினி மெட்ரிக் பள்ளியினர் வென்றனர். அபாரமாக விளையாடிய வித்ய விகாஷினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி நடைபெற்ற மூன்று பிரிவுகளிலும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணியினர் மண்டலம் மற்றும் மாவட்ட போட்டிக்கு தகுதி பெறுவர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்