பெரிவர்களுக்கு இணையாக சிறுவர்களும் உடல் கட்டமைப்பு வெளிப்படுத்தி அசத்தல்|Bodybuilding competition
வேர்ல்ட் பிட்னெஸ் பெட்ரேஷன் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு பிட்னெஸ் பாடிபில்டிங் அஸோஸியேஷன் இணைந்து ஆண் அழகன் போட்டி சென்னையில் நடைபெற்றது. சென்னை தியாகராய நகரில் 22 பிரிவில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 500 க்கும் மேர்பட்டோர் பங்கேற்று தங்களது உடல் கட்டமைப்புகளை வெளிப்படுத்தினர். உடல் கட்டமைப்பு மூலம் ஆண்கள் தங்களது திறமையை வெளிப்படுத்திய நிலையில் ஆண்களுக்கு இணையாக பள்ளி சிறுவர்கள் போட்டி போட்டு தங்களது உடல் கட்டமைப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தித்தினர். சிறுவர்கள் பிரிவில் போட்டியிட்டவர்களை தேர்வு செய்வதில் நடுவர்களுக்கு குழப்பம் ஏற்படும் அளவிற்கு அனைவரும் தங்களது உடல் கட்டமைப்பு வெளிப்படுத்தி அசத்தினர். சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த பவின் சிறுவன் பரிசு பெற்றான். சிறுவன் கோப்பை மற்றும் சான்றிதழுடன் குடும்பத்தாருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தான். ஆண் அழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினர்.