138 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| sports | carrom| champion| Indoor sports
138 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| sports | carrom| champion| Indoor sports திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான கேரம் போட்டிகள் முதலிபாளையம் நிஃப்டி கல்லூரி வளாகத்தில் துவங்கியது. எம்.என் முருகப்ப செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி விழாவிற்கு தலைமை வகித்தார். நிஃப்டி கல்லூரி முதல்வர் ராதாமணி மற்றும் கல்லூரி டீன் சம்பத் போட்டிகளை துவக்கி வைத்தனர். 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட ஒற்றை மற்றும் இரட்டையர் பிரிவில் மாணவ மாணவிகளுக்கு தனித் தனியாக போட்டி நடத்தப்பட்டது. மாணவர்களுக்கான 14 வயதிற்கு உட்பட்டோர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் தலா 19 அணி களத்தில் உள்ளனர். அதேபோல் 17 வயதிற்கு உட்பட்டோர் மாணவர் ஒற்றையர் பிரிவில் 14 அணிகளும் இரட்டையர் பிரிவில் 15 அணிகளும் போட்டியிடுகின்றன. மாணவர்களுக்கான 19 வயதிற்கு உட்பட்ட ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் தலா ஒன்பது அணிகள் பங்கேற்கின்றனர். மாணவிகளுக்கான 14 வயதிற்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவில் 14 அணிகளும் இரட்டையர் பிரிவில் 10 அணிகளும் களத்தில் உள்ளனர். 17 வயதிற்கு உட்பட்ட மாணவியர் ஒற்றையர் பிரிவில் 10 அணிகளும் பிரிவில் 11 அணிகளும் மோதுகின்றனர். மாணவிகளுக்கான 19 வயதுக்கு உட்பட்ட ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் தலா நான்கு அணிகள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை போட்டி குறு மைய இணைச் செயலாளர் வனிதா செய்தார். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் அணியினர் மண்டல மற்றும் மாவட்டப் போட்டிக்கு தேர்வு பெறுவர்.