வெற்றி பெறும் மாணவர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி | Sports| Champion| Judo | State level| Tiruppur
வெற்றி பெறும் மாணவர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி | Sports| Champion| Judo | State level| Tiruppur திருப்பூர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள்விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான ஜூடோ நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் புனிதா போட்டிகளை துவக்கி வைத்தனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சேலம் மாவட்ட ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆய்வாளர் லாரன்ஸ் பங்கேற்றார். 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் போட்டி நடந்தது. 14 வயதிற்கு உட்பட்ட ஏழு எடை பிரிவுகளில் 58 பேர், 17 வயதிற்கு உட்பட்ட 10 எடை பிரிவுகளில் 57 பேர் மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட 10 பிரிவுகளில் 41 பேர் களத்தில் உள்ளனர். ஒவ்வொரு எடை பிரிவிலும் முதலிடம் பெறும் வீரர் வீராங்கனைகள் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.