/ தினமலர் டிவி
/ விளையாட்டு
/ வெற்றி பெறும் வீரர்கள் மாநில போட்டிக்கு தகுதி | CM Cup tournament | Weight lifting | covai
வெற்றி பெறும் வீரர்கள் மாநில போட்டிக்கு தகுதி | CM Cup tournament | Weight lifting | covai
கோவை சூலூர் கே.பி.ஆர் கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் கோப்பைக்கான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள்,மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு போட்டி நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் கீதா மற்றும் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்டோர் போட்டியாளர்களை ஊக்குவித்தனர் . மாவட்ட அளவில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகள் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர். ஏற்பாடுகளை கோவை மாவட்ட பளு தூக்கும் சங்கம் செய்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
செப் 11, 2025