கிரிக்கெட் முதல் டேபிள் டென்னிஸ் வரை.. விறுவிறுப்பாக நடத்த போட்டிகள் |Anna University |Zone 11
கிரிக்கெட் முதல் டேபிள் டென்னிஸ் வரை.. விறுவிறுப்பாக நடத்த போட்டிகள் |Anna University |Zone 11 அண்ணா பல்கலைக்கழக மண்டலம் 11-க்கான கிரிக்கெட் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகள், ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கின. செப்டம்பர் 20-ஆம் தேதி வரை நடைபெறும் கிரிக்கெட் போட்டியில், பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 17 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையில் நடைபெறுகின்றன. இன்று நடைபெற்ற போட்டியில், ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி அணி, ரங்கநாதர் பொறியியல் கல்லூரி அணியை வென்றது. தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில், ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி காரமடை அணி, கேத்தி சி.எஸ்.ஐ. கல்லூரி அணியை வென்றது. மேலும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் தலா 6 அணிகள் பங்கேற்றன. இதில் குமரகுரு கல்லூரி, கே.ஜி.ஐ.எஸ்.எல்., ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, எஸ்.எம்.எஸ். பொறியியல் கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரி அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இந்தப் போட்டிகளை கல்லூரி முதல்வர் ஏ. சௌந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் நித்தியானந்தன் செய்திருந்தார்.