உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / SP வீசிய பந்து விளாசிய IG டைட்டில்: போலீஸ் - பொதுமக்கள் நட்புணர்வு கிரிக்கெட் போட்டி | Trichy |

SP வீசிய பந்து விளாசிய IG டைட்டில்: போலீஸ் - பொதுமக்கள் நட்புணர்வு கிரிக்கெட் போட்டி | Trichy |

போலீஸ் - பொதுமக்கள் நட்புணர்வு கிரிக்கெட் போட்டி | Trichy | Police vs Public | You vs Me Challenge போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நட்புறவை பேணும் விதமாகவும், போதை பழக்கத்திலிருந்து விடுபட்டு, விளையாட்டை நோக்கி செல்வோம் என்பது குறித்த விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது. முன்னதாக காவல்துறை மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் போதைக்கு எதிரான உறுதிமொழி வாசித்தார். பொதுமக்கள் அனைவரும் உறுதி மொழி ஏற்றனர். தொடர்ந்து கிரிக்கெட் போட்டியை ஐஜி பாலகிருஷ்ணன் டாஸ் போட்டு தொடங்கி வைத்தார். திருச்சி எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ், பந்து வீச ஐஜி பாலகிருஷ்ணன் 4 ரன்கள் எடுத்து விளாசினார் 8 ஓவர் போட்டியாக நடைபெறும் போட்டியில், திருச்சி மாநகர், திருச்சி மாவட்ட காவல்துறை, பட்டாலியன் பிரிவில் இருந்து 8 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. நாக்அவுட் முறையில் நடத்தப்படும் போட்டியில் வெற்றிபெறும் 4 அணிகள், பொதுமக்கள் அணியுடன் விளையாடுவார்கள். வெற்றிபெறும் அணிக்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பையும், 2வது அணிக்கு 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பை, 3வது மற்றும் 4வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா 10000, 7000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும். சிறந்த ஆட்ட நாயகன் மற்றும் சிறந்த பந்துவீச்சாளருக்கு என தலா 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிகழ்வில் டிஐஜி சிபி சக்கரவர்த்தி, பட்டாலியன் தலைமை கமாண்டர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆக 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !