கோவை மாவட்ட கால்பந்து சங்கம் ஏற்பாடு | Football B Division League Tournament | Covai
கோவை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் நடத்தப்படும் பி-டிவிஷன் லீக் கால்பந்து போட்டிகள் கடந்த 13 ம் தேதி துவங்கியது. நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் போட்டிகளில் 11 அணிகள் பங்கேற்றுள்ளன. இதுவரை 34 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இன்று நடந்த போட்டியில் கோயம்புத்தூர் சிட்டி ஃபுட்பால் அகாடமி அணியும், கோயம்புத்தூர் பார் அசோசியேஷன் ஃபுட்பால் கிளப் அணியும் மோதியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் கோயம்புத்தூர் சிட்டி அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் அசோகா ஃபுட்பால் கிளப் அணியும், பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும் மோதியது. இதில் 4-1 என்ற கோல் கணக்கில் அசோகா அணி வெற்றி பெற்றது. போட்டிகளை கோவை மாவட்ட கால்பந்து சங்கத் தலைவர் மதன் செந்தில் தலைமையிலும், செயலாளர் அணில்குமார் முன்னிலையிலும் நடத்தி வருகின்றனர்.