இந்தியாவின் 90வது செஸ் கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதி | Ilamparthi | Grandmaster | 90th GM
இந்தியாவின் 90வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை சென்னயை சேர்ந்த இளம்பரிதி பெற்றுள்ளார். இவருக்கு வயது 16. தமிழகத்தின் 35வது செஸ் கிராண்ட் மாஸ்டராகவும் உருவெடுத்துள்ளார். சென்னையில் 2009ல் பிறந்த இவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். செஸ் மீது இளம் வயதில் இருந்தே ஆர்வம் அதிகம். 2022ல் நடந்த 14 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று உலக சாம்பியன் பட்டம் பெற்றார். இதன் பின் இவரது திறமையை சர்வதேச சமூகம் கவனிக்க துவங்கியது. அந்த ஆண்டு, இளம்பரிதி பயிற்சிக்கு நெதர்லாந்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் அனிஸ் கிரி உதவினார். தொடர்ந்து 2023ல் தனது 13 வயதில் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்றார். இதைடுத்து ஷியாம் சுந்தர் என்பவரிடம் இளம்பரிதி பயிற்சி பெற்று வருகிறார். கிராண்ட்மாஸ்டர் பட்டத்திற்கு தேவையான 2500 புள்ளிகள் என்ற எல்லையை, 2024-25ல் நடைபெற்ற ரில்டன் கோப்பை (Rilton Cup) போட்டியின்போது அவர் எட்டினார். இறுதியாக, போஸ்னியாவில் பெற்ற போட்டி மூலம் அவரது கிராண்ட்மாஸ்டர் பட்டம் உறுதியானது. இப்போது செஸ் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்ற இளம்பரிதிக்கு பாராட்டுகள் குவிகிறது. துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் தமிழகத்தின் செஸ் போட்டிகளில் மற்றொரு மைல்கல் மற்றும் பெருமைமிக்க தருணம். இந்தியாவின் 90வது, தமிழகத்தின் 35வது கிராண்ட் மாஸ்டர் ஆன இளம்பரிதிக்கு வாழ்த்துகள். அவரது எதிர்கால செஸ் பயணம் தொடர்ந்து வெற்ற பெறவும், இன்னும் பல சாதனைகளை படைக்கவும் வாழ்த்துகள் என அவர் கூறினார். #Chess #Grandmaster #India90thGM #Ilamparthi #IndianChess #Chennai #16YearsOld #ChessProdigy #TamilNadu #FIDE