11 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| PSG Cup Tournament| Sports| Champion| Covai
11 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| PSG Cup Tournament| Sports| Champion| Covai கோவை பி.எஸ்.ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 60வது அகில இந்திய கூடைப்பந்து போட்டி இன்று துவங்குகிறது. துவக்க நிகழ்ச்சியில் பாரத எஸ்டேட் வங்கி கோவை மண்டல மேலாளர் காயத்ரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தொடர்ந்து ஐந்து நாட்கள் போட்டி நடைபெறும் அறுபதாம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு முதல் பெண்களுக்கான போட்டி துவங்கப்பட்டுள்ளது. ஆண்கள் பிரிவில் ஏழு அணிகளும் பெண்கள் பிரிவில் நான்கு அணிகளும் களத்தில் உள்ளனர். ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ஒரு லட்சம், இரண்டாம் பரிசு 75000, மூன்றாம் பரிசு 40 ஆயிரம் மற்றும் நான்காம் பரிசு 30 ஆயிரம் வழங்கப்படும். சிறந்த வீரருக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பிரிவில் முதல் பரிசு 75,000, இரண்டாம் பரிசு 50,000 , மூன்றாம் மற்றும் நான்காம் பரிசு 25 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த வீராங்கனைக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும். மேலும் இந்தியாவில் வெற்றி பெற்ற பி எஸ் ஜி கல்வி நிறுவன மாணவர்களுக்கு பணம் முடிப்புகள் வழங்கப்பட உள்ளது. மொத்தம் 6 லட்சம் ரூபாய் பரிசு தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது 30ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவிற்கு பி எஸ் ஜி கல்வி நிறுவனம் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகிப்பார். விழாவில் விளையாட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக கூடைப்பந்து கழக தலைவர் உள்ளிட்ட பல பங்கேற்க உள்ளனர். இன்று முதல் போட்டியில் லோனாவாலா இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து சென்னை தமிழ்நாடு இதர அணி விளையாடுகிறது