உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / விறுவிறுப்பான ஆட்டம்| District Leval Judo Tornament | Tirupur

விறுவிறுப்பான ஆட்டம்| District Leval Judo Tornament | Tirupur

விறுவிறுப்பான ஆட்டம்| District Leval Judo Tornament | Tirupur திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருப்பூர் வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட ஜூடோ போட்டிகள் நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட ஜூடோ பயிற்சியாளர் முரளி ஆகியோர் துவக்கி வைத்தனர். சேலம் மாவட்ட ஓய்வு உடற்கல்வி ஆய்வாளர் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். பொறுப்பாசிரியர் ஆனந்தன், ஜெயக்கண்ணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான 7 எடைப் பிரிவுகளில் 43 பேரும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான 9 எடைப் பிரிவுகளில் 39 பேரும், 19 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான 9 எடை பிரிவுகளில் 29 பேர் என மொத்தம் 111 பேர் பங்கேற்றனர். இன்றைய போட்டிகளில் ஒவ்வொரு எடைப் பிரிவிலும் முதலிடம் பெறும் மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவர். நடுவர்களாக அஸ்வின், ஷேக் முகமது, ஜனகராணி, பிரவீன்குமார், சிவா, அபிமன்யு ஆகியோர் செயல்பட்டனர்.

ஆக 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !