முதல்வர் கோப்பை கபடி போட்டிகளமிறங்கிய 80 மாணவர் அணிகள் CM Trophy |Kabaddi Tournament |School Kabadd
முதல்வர் கோப்பை கபடி போட்டிகளமிறங்கிய 80 மாணவர் அணிகள் CM Trophy |Kabaddi Tournament |School Kabaddi திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரியில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான மாணவர் கபடி போட்டி நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து 80 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்ற இந்தப் போட்டியை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் வி.கே. அய்யங்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம் பிடித்தது. இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாவது இடத்தையும், கே.எஸ்.சி. பள்ளி அணி மூன்றாவது இடத்தையும், மங்கலம் அரசு பள்ளி அணி நான்காவது இடத்தையும் பெற்றன. தொடர்ந்து மாணவியர் பிரிவுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டியும் நடைபெற்றது. இதனை கல்லூரி முதல்வர் ராதாமணி தொடங்கி வைத்தார். இதில் 20 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடின. இதனிடையே, திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள ஏ.கே.ஆர். அகாடமி பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியும் நடைபெற்றது.