திறமையை வெளிப்படுத்திய வீரர்கள் | Karate Tournament | Udumalpet | Tirupur
திறமையை வெளிப்படுத்திய வீரர்கள் | Karate Tournament | Udumalpet | Tirupur திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 5வது சர்வதேச கராத்தே போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகள், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சார்பு நீதிமன்ற நீதிபதி மணிகண்டன், எம்.பி., ஈஸ்வரசாமி, எம்.எல்.ஏ.,க்கள் ஜெயக்குமார், ஜெயராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். வீரர், வீராங்கனைகளின் வயது மற்றும் எடைப் பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன. கட்டா, குமித்தே, டீம் கட்டா, ஓப்பன் கட்டா, வெப்பன் கட்டா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் இளம் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். ஏற்பாடுகளை ஸ்கூல் ஆஃப் கோஜூ ரியூ கராத்தே பள்ளியின் கராத்தே மாஸ்டர் அருள்குமார் செய்திருந்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம்பிரபு, கராத்தே பள்ளித் தலைவர் சிதம்பரசாமி, டாக்டர் வாசுதேவன், விவேகானந்தா பள்ளி தாளாளர் மூர்த்தி ஆகியோர் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினர்.