உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா கால்பந்து போட்டி திடீர் ரத்து Messi's India visit cancelled | Football fan

அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா கால்பந்து போட்டி திடீர் ரத்து Messi's India visit cancelled | Football fan

அர்ஜென்டினா கால்பந்து அணியின் வீரர் லியோனல் மெஸ்சிக்கு உலகம் முழுதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் இந்தியாவுக்கு 2011ல் வருகை தந்தார். அப்போது, அர்ஜென்டினா அணியும் வெனிசுலா அணியும் மோதிய போட்டி கொல்கத்தாவில் நடந்தது. 14 ஆண்டுகள் கழித்து 2வது முறையாக மெஸ்ஸி இந்தியா வரவுள்ளதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. கேரளாவில் நவம்பர் 17 ஆம் தேதி நடக்கவிருந்த அர்ஜென்டினா ஆஸ்திரேலியா இடையேயான நட்புரீதியிலான கால்பந்து போட்டியில் அவர் விளையாட இருந்தார். மெஸ்சியுடன் சேர்ந்து ஆர்ஜென்டினா அணி வீரர்கள் எமிலியானோ மார்டினெஸ், அலெக்சிஸ் மேக் அலிஸ்டர், ரோட்ரிகோ டி பால், நிக்கோலஸ் ஓட்டமெண்டி, ஜூலியன் அல்வாரெஸ் உள்ளிட்டோரும் விளையாட இருந்தனர். இதனால் இந்திய கால்பந்து ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் மெஸ்ஸி வருகைக்காக காத்திருந்தனர். இப்போட்டிக்காக கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் 70 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அர்ஜென்டினா அணி மற்றும் மெஸ்சியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது, இந்திய கால்பந்து ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டியை நடத்த சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பிடம் (FIFA) அனுமதி பெறுவதில் ஏற்படும் தாமதமே தற்காலிக ரத்துக்கு காரணம் என அர்ஜென்டினா, ஆஸ்திரேலிய கால்பந்து சங்கங்கள் கூறியுள்ளன. அர்ஜென்டினா கால்பந்து சங்கத்திடம் ஆலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக போட்டியை ஸ்பான்சர் செய்யும் ரிப்போர்ட்டிங் ப்ராட்காஸ்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அர்ஜென்டினா அணியின் அடுத்த மாதத்திற்கான சுற்றுப்பயண விவரங்களை அந்நாட்டு கால்பந்து சங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அதில் கேரளா சுற்றுப்பயணத் திட்டம் இடம்பெறவில்லை. லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி, நவம்பரில் பயிற்சிக்காக ஸ்பெயின் செல்கிறது. நவ.14ம் தேதி அங்கோலாவுக்கு எதிரான ஒரேயொரு நட்பு போட்டியில் பங்கேற்க லுவாண்டா செல்கிறது என அர்ஜென்டினா கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. #Messi #India #cancel #Football #Footballfans #Argentinateam #Kerala

அக் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ