லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் டி-20 கிரிக்கெட் போட்டி சேர்ப்பு! Olympic Games | Cricket | T-20
2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க உள்ள ஒலிம்பிக் தொடரில், 128 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தொடருக்கு இந்திய அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 1900ம் ஆண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் மற்றும் கடைசியாக கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போது இங்கிலாந்து அணி தங்கம் வென்றது. கிரிக்கெட் போட்டி நடத்த அதிக நேரம் பிடிக்கும் என்பதால் அதன் பிறகு ஒலிம்பிக்கில் இருந்து கிரிக்கெட் போட்டிகள் நீக்கப்பட்டன. இந்நிலையில் டுவென்டி-20 கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதனை ஏற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் 34வது ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது 128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் பிரதான மைதானம் உள்ள இடத்திலிருந்து 48 கி.மீ. தொலைவில் உள்ள தெற்கு கரோலினாவின் பொமோனாவில் கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ளன. டுவென்டி-20 போட்டியாக நடக்கும் இத்தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் பங்கேற்க உள்ளன. இதனை ஐசிசி உறுதிப்படுத்தி இருக்கிறது. ஜூலை 12 முதல் 29 வரை மொத்தம் 28 போட்டிகள் நடக்கின்றன. பெண்கள் அணிக்கான இறுதிப்போட்டி ஜூலை 20 அன்றும், ஆண்கள் இறுதிப்போட்டி ஜூலை 29 அன்றும் நடக்க உள்ளது. இது தொடர்பாக துபாயில், சர்வதேச ஒலிம்பிக் சங்கம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு கண்டத்திலும் தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணி ஒலிம்பிக் தொடரில் தகுதி பெறும் அணிகளாக அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆசியா கண்டத்தில் இந்திய அணியும், ஐரோப்பா கண்டத்தில் இங்கிலாந்து அணியும், ஆப்ரிக்கா கண்டத்தில் தென் ஆப்ரிக்கா அணியும், ஆஸ்திரேலியா கண்டத்தில் ஆஸ்திரேலியா அணியும் தகுதி பெறுகின்றன. 5வது இடத்தில் போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில் அமெரிக்கா தகுதி பெற வாய்ப்பு உள்ளது. தகுதிசுற்று போட்டி நடத்தி ஆறாவது அணியை தேர்வு செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் உள்ளன. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #OlympicGames #Cricket #T20 #LosAngeles #India #Sports #2028 #Olympics #CricketInOlympics #IndianCricket #T20Cricket #LosAngeles2028 #OlympicCricket #CricketLovers #SportsFans #InternationalCricket #UnityInSports #T20Challenge #GameOn