/ தினமலர் டிவி
/ விளையாட்டு
/ 500 வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு| State level silambam tournament| Tanjavur
500 வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு| State level silambam tournament| Tanjavur
தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு கலை அரங்கத்தில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. கலைப்புயல் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி சார்பில் போட்டி நடத்தப்பட்டது. அண்டர் 8, அண்டர் 15 மற்றும் 15 வயதுக்கு மேற்பட்டோர் என 3 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. மேலும் ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, சண்டை என பல பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. போட்டியில் தஞ்சாவூர் , திருச்சி, மதுரை, உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், ரொக்கப் பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
அக் 13, 2025