வெற்றி பெற்ற மாணவிகள் மாநில போட்டிக்கு தேர்வு| Sports | Silambam| Youth welfare| Tiruppur
வெற்றி பெற்ற மாணவிகள் மாநில போட்டிக்கு தேர்வு| Sports | Silambam| Youth welfare| Tiruppur திருப்பூர் நிப்ட் டீ கல்லூரியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் போட்டிகளை துவக்கி வைத்தார் 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் போட்டி நடத்தப்பட்டது. 14 வயதிற்கு உட்பட்ட மாணவியர் ஒற்றைக்கம்பு பிரிவில் ஹரிணி, மோகிதா மற்றும் பவ்யஸ்ரீ ஆகியோர் முறையாக முதல் மூன்று இடம் வென்றனர் இதே பிரிவில் இரட்டைக் கம்பு போட்டியில் சார்நிதா, ஜோஷ்ஷினி மற்றும் சாகித்யா வெற்றி பெற்றனர் 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் ஒற்றைக்கம்பு பிரிவில் டென்ஷிவாணி, தனுஸ்ரீ மற்றும் ஜானு ஸ்ரீ முதல் மூன்று இடம் வென்றனர். இதே பிரிவில் இரட்டை கம்பு போட்டியில் காஞ்சனா, அக்ஷயா மற்றும் பிரவேஷிகா வெற்றி பெற்றனர். 19 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் ஒற்றைக்கம்பு பிரிவில் மது ஸ்ரீ, தீக்ஷா மற்றும் தியானா முதல் மூன்று இடம் வென்றனர். அதே பிரிவில் இரட்டைக் கம்பு போட்டியில் துவாரகா, தனுஷ்கா மற்றும் அரிஷ்கா வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் வென்ற மாணவிகள் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்