விறுவிறுப்பான ஆட்டம்|sports meet|avinashi | tiruppur
அவிநாசி குறுமைய அளவிலான தடகள விளையாட்டுப் போட்டி திருப்பூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடந்தது. போட்டிகளை மாவட்ட உடற்கல்வி அலுவலர் மகேந்திரன் துவக்கி வைத்தார். இதில் 100 மீட்டர், 200 மீட்டர் உள்ளிட்ட ஓட்டப் போட்டி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தட்டெறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் அவிநாசி வட்டார பள்ளிகளைச் சேர்ந்த 1,000 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாணவ, மாணவியர் தங்களின் திறமைகளை வெளிக்காட்டி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
ஆக 12, 2025