மாநில போட்டிக்கு தகுதி பெறும் வீரர், வீராங்கனைகள்|sports meet|tiruppur
திருப்பூர் வடக்கு குறுமைய விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் இரண்டு நாட்கள் நடக்கிறது. போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காளிமுத்து துவக்கி வைத்தார். மாநில அளவில் சாதனை செய்த மாணவ மாணவியர் ஒலிம்பிக் ஜோதி எடுத்து வந்து ஏற்றினர். விளையாட்டு வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முதல் நாளில் மாணவ, மாணவியர்க்கான 100 மீட்டர், 200 மீட்டர், 600 மீட்டர், 3000 மீட்டர் ஓட்டப் பந்தயங்கள் நடந்தது. குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளும் நடத்தப்பட்டது. போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் மாணவ மாணவியர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் இளங்கோ உள்ளிட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் செய்தனர்.