கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு | Sports Meet | Covai
கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு | Sports Meet | Covai கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் கோவை வருவாய் மாவட்டம் A - Zone) அ - குறுமைய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகள் கோவை கோட்டைமேடு மன்ப உல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது. இதில் 35 பள்ளிகள் பங்கேற்றன. செஸ் போட்டியை பள்ளி தாளாளர் இனாயத்துல்லா துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் ராபியத்துல் பசிரியா வரவேற்றார். இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 310 மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். வரும் ஆகஸ்டு 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பாரதியார் பல்கலையில் தடகளப் போட்டிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் மெகதூர் பாட்ஷா செய்திருந்தார்.
ஜூலை 22, 2026