உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / மாநில போட்டிக்கு தயாராகும் டேக்வாண்டோ வீரர்கள்

மாநில போட்டிக்கு தயாராகும் டேக்வாண்டோ வீரர்கள்

மாநில போட்டிக்கு தயாராகும் டேக்வாண்டோ வீரர்கள் aekwondo Competition |Tiruppur Taekwondo திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் பள்ளியில், மாவட்ட அமெச்சூர் டேக்வாண்டோ அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. போட்டிக்கு பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் நவநீதன் முன்னிலை வகித்தார். கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டிகளுக்கு நடுவர்களாக பாலகிருஷ்ணன், முரளி, சரவணகுமார் மற்றும் சரவணமுத்து ஆகியோர் செயல்பட்டனர். இதில் வேகமாக குத்துதல், வேகமாக உதைத்தல், பிவி, சப்-ஜூனியர், கேடட், ஜூனியர் மற்றும் சீனியர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட அளவிலான இந்தப் போட்டியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று தங்களது டேக்வாண்டோ திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தங்கம், சில்வர் மற்றும் பிரவுன் மெடல்கள் வழங்கப்பட்டன. மேலும், போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பலரும் நேரில் பார்வையிட்டு ரசித்தனர்.

செப் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !