வி.கே.ஜி., அரசுப்பள்ளி மாணவர்கள் அசத்தல் | Tennicoit
திருப்பூர் வித்ய விகாசினி பள்ளியில் மாவட்ட அளவிலான மாணவர் பிரிவு டென்னிகாய்ட் போட்டி நடைபெற்றது.
பள்ளி தாளாளர் தர்மலிங்கம் போட்டிகளை துவக்கி வைத்தார்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார்.
குறுமைய அளவில் வெற்றி பெற்ற அணிகள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
ஜூனியர் ஒற்றையர் பிரிவில்
அவிநாசி எம்.எஸ்., வித்யாலயா அணி 2-1 என்ற செட் கணக்கில் காங்கயம் ஜே.சி.இ.இ.எஸ்., மெட்ரிக் அணியை வென்றது.
ஜூனியர் இரட்டையர் பிரிவில் திருப்பூர் தெற்கு வித்ய விகாசினி 2-1 என்ற செட் கணக்கில்
காங்கயம் ஜே.சி.இ.இ.எஸ்., மெட்ரிக் அணியை வென்றது.
சீனியர் ஒற்றையர் பிரிவில் திருப்பூர் வடக்கு அய்யங்காளிபாளையம் வி.கே.ஜி., அரசு மேல்நிலைப்பள்ளி அணி 2-1 என்ற செட் கணக்கில் தெற்கு பிரண்ட்லைன் மெட்ரிக் அணியை வென்றது.
சீனியர் இரட்டையர் பிரிவில் வடக்கு அய்யங்காளிபாளையம் வி.கே.ஜி., அரசு மேல்நிலைப்பள்ளி அணி 2-1 என்ற செட் கணக்கில் தெற்கு பிரண்ட்லைன் மெட்ரிக் அணியை வென்றது.
சூப்பர் சீனியர் ஒற்றையர் பிரிவில்
தெற்கு வித்ய விகாசினி மெட்ரிக் அணி 2-1 என்ற செட் கணக்கில் வடக்கு அய்யங்காளிபாளையம் வி.கே.ஜி., அரசு மேல்நிலைப்பள்ளி அணியை வென்றது.
சூப்பர் சீனியர் இரட்டையர் பிரிவில் தெற்கு வித்ய விகாசினி மெட்ரிக் அணி 2-1 என்ற செட் கணக்கில் அவிநாசி ஏ.வி.பி., மெட்ரிக் அணியை வென்றது.
ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தில் வெற்றி பெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.