உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / தெற்கு குறுமையம் டென்னிகாய்ட் போட்டி

தெற்கு குறுமையம் டென்னிகாய்ட் போட்டி

திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் காங்கயம் ரோடு, வித்ய விகாசினி பள்ளியில் நடந்தது. வட்டார அளவிலான டென்னிகாய்ட் போட்டியில் 14 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் என 2 பிரிவுகளில் மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது இதில் மாணவ, மாணவிகள் 60 பேர் பங்கேற்று விளையாடினர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறுபவர், வருவாய் மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டியில் பங்கேற்பர். போட்டியை வித்ய விகாசினி பள்ளி தாளாளர் தர்மலிங்கம் மற்றும் செயலாளர் நகுலன் பிரணவ் துவக்கி வைத்தனர். முருகன், ஆனந்த், மணிவண்ணன், தமிழ் வாணி, பாலா, கார்த்திக் ஆகியோர் போட்டியின் நடுவர்களாக செயல்பட்டனர்.

ஜூலை 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி