உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / டென்னிஸ் களத்தில் பல்கலைக்கழக அணிகள்!

டென்னிஸ் களத்தில் பல்கலைக்கழக அணிகள்!

டென்னிஸ் களத்தில் பல்கலைக்கழக அணிகள்! Bharathiar University Tennis, College Tennis Tournament பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் மற்றும் பெண்கள் டென்னிஸ் போட்டிகள், கோவை டாக்டர் எஸ்.என்.எஸ். ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தொடங்கின. இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் 10-க்கும் மேற்பட்ட கல்லூரி அணிகள் கலந்து கொண்டுள்ளன. போட்டிகளை கல்லூரி முதல்வர் அனிதா மற்றும் துணை முதல்வர் நரேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதல் போட்டியில் கோவை அரசு கலைக் கல்லூரி மற்றும் குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணிகள் மோதின. இதில் கோவை அரசு கலைக் கல்லூரி அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் பாரதியார் பல்கலைக்கழக அணி 2-0 என்ற புள்ளிக்கணக்கில் ராமகிருஷ்ணா எஸ்.டி.சி. கல்லூரி அணியை வென்றது. மூன்றாவது போட்டியில் ஜி.ஆர்.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி 2-0 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியை வீழ்த்தி அசத்தியது.

அக் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ