டைட்டில்: 28 அணிகள் பங்கேற்பு | Trichy | State Handball Tournament | Chennai Teams Take the Lead
திருச்சி மாவட்டம் மணப்பாறையில், கலைஞர் தமிழ்ச் சங்கம் மற்றும் ராமஜெயம் அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டிகள் பழைய மனமகிழ் மன்றத்தில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஆண்கள், பெண்கள் பிரிவில் சென்னை, தஞ்சாவூர், கோவை, சேலம், ஈரோடு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 28 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியை திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் முத்துசெல்வம், கலையரசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு காவல்துறை சென்னை அணி முதல் பரிசு, பனிமலர் சென்னை அணி 2ம் பரிசு, ஜமால் முகமது காலேஜ் திருச்சி, திருமயம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் முறையே 3ம் மற்றும் 4ம் பரிசுகள் பெற்றன. பெண்கள் பிரிவில் சென்னை விநாயகா மிஷன் அணி முதல் பரிசு, தமிழ்நாடு காவல்துறை சென்னை அணி 2ம் பரிசு, ஆத்தூரி பாரதியார் அணி, சேலம் சக்தி கைலாஷ் அணி முறையே 3ம் மற்றும் 4ம் பரிசுகள் பெற்றன. ஆண்கள் அணிக்கு முதல் பரிசாக 40 ஆயிரம் ரொக்கம், ராமஜெயம் நினைவு கோப்பை, 2ம் பரிசாக 30 ஆயிரம் 3ம், 4ம் பரிசாக 20 ஆயிரம் 10 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. பெண்கள் அணிக்கு முதல் பரிசு 30 ஆயிரம், 2ம் பரிசு 20 ஆயிரம், 15 ஆயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் 3வது மற்றும் 4வது பரிசாக வழங்கப்பட்டது. ராமஜெயம் நினைவு கோப்பையும் வழங்கப்பட்டது.