700க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு| Sports | zonal | champions| covai
700க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு| Sports | zonal | champions| covai கோவை நேரு மைதானத்தில் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் மண்டல தடகளப் போட்டிகள் துவங்கியது. கோவை ஸ்டேன்ஸ் பள்ளி சார்பில் போட்டி நடத்தப்படுகிறது. இன்று மற்றும் நாளை போட்டி தொடர்ந்து நடைபெறும். போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். 2024ம் ஆண்டு நடைபெற்ற 70 வயதிற்கு மேற்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய டாக்டர் ஜெயக்குமார் ஸ்டானியட், நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் சுசீதா ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். ஸ்டேன்ஸ் ICSE பள்ளி முதல்வர் ஜெனட் ஜெயபிரகாஷ், ஸ்டேன்ஸ் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஜான் ஸ்டீபன், ஸ்டேன்ஸ் CBSE பள்ளி முதல்வர் எலின் ஜெத்ரோ மற்றும் ஸ்டேன்ஸ் சர்வதேசப் பள்ளி முதல்வர் ஜார்ஜினா சிம்மன்ஸ் ஆகியோர் வீரர்களை உற்சாகப்படுத்தினர். வீரர்கள் களத்தில் அபாரமாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து போட்டி நடக்கிறது. விறுவிறுப்பாக நடைபெறும் போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசிக்கின்றனர்