/ தினமலர் டிவி
/ சினிமா
/ ரோபோ சங்கர் மரணத்துக்கு காரணம் இதுதான்-ஷாக் ரிப்போர்ட் robo shankar passedaway | rip robo shankar
ரோபோ சங்கர் மரணத்துக்கு காரணம் இதுதான்-ஷாக் ரிப்போர்ட் robo shankar passedaway | rip robo shankar
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 46. சின்னத்திரையில் காமெடியனாக ஜொலித்த ரோபோ சங்கர், சினிமாவிலும் காமெடியனாக உயர்ந்தார். தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கினார். திடீரென மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். பின்னர் படிப்படியாக அதில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு வந்தார். படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் சில நாட்கள் முன்பு சூட்டிங்கின் போது திடீரென மயங்கி விழுந்த ரோபோ சங்கரை ஜெம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலன் அளிக்கவில்லை. இளம் வயதிலேயே ரோபோ சங்கர் காலமானார்.
செப் 19, 2025