ஹோண்டா சி.பி., - 350 ஹண்டர் vs ஹைனெஸ்
'ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ்' நிறுவனம், அதன் 'சி.பி., - 350' பைக் அணிவகுப்பை மேம்படுத்தி, அறிமுகம் செய்துள்ளது. இதில், 'சி.பி., - 350', 'சி.பி., - 350 ஹைனெஸ்' மற்றும் 'சி.பி., - 350 ஆர்.எஸ்.,' ஆகிய மூன்று பைக்குகள் உள்ளன.இந்த பைக்குகளுக்கு வழங்கப்படும், 348 சி.சி., இன்ஜின், 'ஒ.பி.டி., - 2பி' உமிழ்வு கட்டுப்பாடு விதிமுறை க்கு ஏற்றவாறும், 20 சதவீதம் எத்தனால் கலப்பு எரிவாயுவில் இயங்கும் வகையிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
சி.பி., - 350
இது, ரோட்ஸ்டர் பைக்காகும். இந்த பைக், நகர்ப்புற பயணத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால், இன்ஜின் டார்க் 0.5 என்.எம்., அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. 181 கிலோ எடை, 166 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ், ஸ்பிளிட் சீட்கள், 19 மற்றும் 18 அங்குல அலாய் சக்கரங்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.விலை ரூ. 1.99 லட்சம்சி.பி., - 350 ஹைனெஸ்
இது, ரெட்ரோ கிளாசிக் க்ரூஸர் பைக்காகும். இந்த பைக், நீண்ட நெடுஞ்சாலை பயணத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. சி.பி., - 350 பைக்குடன் ஒப்பிடுகையில், குரோம் அலங்காரங்கள் அதிகம் வழங்கப்பட்டுள்ளன. இன்ஜின் டார்க் 30 என்.எம்.,மாக உள்ளது. இதர அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.விலை ரூ.2.10 லட்சம்சி.பி., 350 ஆர்.எஸ்.,
இது, ஸ்போர்ட்டியான ஸ்கிராம்ப்ளர் பைக்காகும். இன்ஜின், எக்ஸாஸ்டுகள் மற்றும் சக்கரங்கள் கருப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 150 எம்.எம்., அளவுக்கு அகலமான பின்புற டயர், அகலமான ஹாண்டில் பார், சிங்கிள் சீட் அமைப்பு, 17 அங்குல பின்புற சக்கரம், 168 எம்.எம்., கொண்ட கிரவுண்ட் கிளியரன்ஸ், 179 கிலோ எடை ஆகியவை இதன் தனித்துவ அம்சங்கள்.மற்றபடி, அனைத்து சி.பி., - 350 பைக்குகளுக்கும், டிராக் ஷன் கன்ட்ரோல் , அசிஸ்ட் சிலிப்பர் கிளட்ச், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., புளூடூத் இணைப்பு வசதி, யூ.எஸ்.பி., சார்ஜிங் போர்ட், செமி டிஜிட்டல் டிஸ்ப்ளே ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இன்ஜின் 348 சி.சி., சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின்
பவர் 21 ஹெச்.பி.,டார்க் 30 என்.எம்., மைலேஜ் 35 கி.மீ.,