உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / ஹோண்டா மின்சார கார் நடப்பு நிதியாண்டில் அறிமுகம்

ஹோண்டா மின்சார கார் நடப்பு நிதியாண்டில் அறிமுகம்

ஹோண்டா சிட்டி ஹைபிரிட் 2026 மாடல் செடான் கார் சென்னையில் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில், அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் துணைத் தலைவர் குணால் பெல் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியா, ஹோண்டா நிறுவனத்திற்கு உலகின் முதல் மூன்று சந்தைகளில் ஒன்றாகும். நடப்பு நிதியாண்டில், ஹோண்டா நிறுவனத்தின் முதல் மின்சார கார் அறிமுகமாகிறது. இதன் சோதனை தற்போது நடந்து வருகிறது. நடப்பாண்டில், மொத்தம் ஆறு அறிமுகங்கள் செய்ய உள்ளோம். 2028ல் சப் காம்பேக்ட் எஸ்.யூ.வி.,யும் மிட் சைஸ் எஸ்.யூ.வி.,யும் அறிமுகமாகின்றன. இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில், தமிழகத்தின் பங்கு 12 சதவீதம் ஆகும். இதனால், தமிழகம் எங்களுக்கு மிகவும் முக்கியமான சந்தை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !