உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / இசுசூ டி மேக்ஸ் ஹை - லேண்டர் ஆட்டோ கியர் பாக்ஸில் வரும் பிக்கப் டிரக்

இசுசூ டி மேக்ஸ் ஹை - லேண்டர் ஆட்டோ கியர் பாக்ஸில் வரும் பிக்கப் டிரக்

'இசுசூ மோட்டார் ஸ்' நிறுவனம், 'டி மேக்ஸ் ஹை - லேண்டர்' என்ற பிக்கப் டிரக்கை 2026 மாடலில், அறிமுகம் செய்துள்ளது. இதன் அடிப்படை விலை, 1.55 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. நீளம் 5.3 மீ., உள்ள இந்த பிக்கப் டிரக்கின் சேசிஸ், இன்ஜின் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை. இதில், 1.9 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ டீசல் இன்ஜின் மட்டுமே வருகிறது. ஏற்கனவே, ரியர் வீல் டிரைவ் அமைப்பு, மேனுவல் கியர் பாக்ஸில் வந்த இந்த பிக்கப், முதல் முறையாக 6 - ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோ கியர் பாக்ஸ் கிடைக்கிறது. இதனால், 1,050 டன் எடை வரை, சுமக்க முடியும்.

எல்.இ.டி., லைட்டுகள், 16 அங்குல அலாய் சக்கரங்கள், புதிய வெளிப்புற தோற்றம், 7 அங்குல டச் ஸ்கிரீன், யூ.எஸ்.பி., சி மற்றும் ஏ - டைப் போர்ட், பவர் ஸ்டீயரிங், இரு காற்று பைகள், ஸ்டீல் அடிப்புறம், ரிவர்ஸ் கேமரா, எலக் ட்ரிக் கண்ணாடிகள் உள்ளிட்ட அம்சங்கள் இதில் இருக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !