கியா கரன்ஸ் கிளாவிஸ் இ.வி.,
'கி யா' நிறுவனம், அதன் 'கரன்ஸ் கிளாவிஸ் இ.வி.,' என்ற மின்சார எம்.பி.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. இது, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இந்நிறுவனத்தின் முதல் மின்சார கார் ஆகும். 25,000 ரூபாய் செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த கார், 42 மற்றும் 51.4 கி.வாட்.ஹார்., என இரு பேட்டரிகளில் கிடைக்கிறது. இதன் ரேஞ்ச், 404 முதல் 490 கி.மீ., வரை தருகிறது. காரை முழு சார்ஜ் செய்ய, 4 முதல் 4 மணி நேரம் 45 நிமிடம் வரை எடுக்கிறது. கரன்ஸ் கிளாவிஸ் இன்ஜின் காருடன் ஒப்பிடுகையில், 25 லிட்டர் முன்புற சேமிப்பு வசதி, ரேஞ்ச் மற்றும் வேகத்தை அதிகரிக்க 'ஏரோ பிளாப்' வசதி ஆகியவை கூடுதல் அம்சங்கள் ஆகும். விலை : ரூ.19 - ரூ.24.50 லட்சம்டீலர் : VST Central KIA - 09087211113 / SVM KIA Motors - 89390 60000