மஹிந்திரா பொலேரோ எஸ்.யூ.வி., வொர்க்ஹார்ஸ்: 4 மீட்டரில், 7 சீட்டர் கார்
'மஹிந்திரா' நிறுவனம், 'பொலே ரோ' எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. தற்போது, 'பி8' என்ற புதிய உயர்ந்த மாடலில் இந்த கார் வந்துள்ளது. இதில், 7 பேர் வரை பயணி க்கலாம். இந்த காரில், எல்.இ.டி., லைட்டுகள், குரோம் அலங்காரத்துடன் புதிய முன்புற கிரில், கார் நிறத்தில் வரும் பம்பர்கள், புதிய 16 அங்குல அலாய் சக்கரங்கள் என குறிப் பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டச் ஸ்கிரீன் அமைப்பு, 'ஸ்டீயரிங் மவுண்டட் கண்ட்ரோல்', யூ.எஸ்.பி., 'சி - டைப் சார்ஜிங்', லெதர் சீட்கள் ஆகியவை முதல் முறையாக இந்த காரில் வருகின்றன. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே வருவதில்லை. இதில், ஏற்கனவே உள்ள 1.5 லிட்டர், 3 - சிலிண்டர், எம் - ஹாக் 75 என்ற டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. 'லேடர் ஆன் பிரேம்' சேசிஸில் கட்டமைக்கப்படும் இந்த காரில், ரியர் வீல் டிரைவ் அமைப்பு மற்றும் 5 - ஸ்பீடு கியர்பாக்ஸ் வருகிறது. மென்மையான பயணத்திற்காக சஸ்பென்ஷன் ட்யூன் செய்யப் பட்டுள்ளது. பாதுகாப்புக்கு இரு காற்றுப் பைகள், ஏ.பி.எஸ், இ.பி.டி., ஆகியவை கிடைக்கின்றன. கூடுதலாக, கருப்பு நிறத்தில் இந்த கார் வருகிறது. விலை ரூ. 7.99 - ரூ. 9.69 லட்சம்