எம்.ஜி., மெஜெஸ்டர் எஸ்.யூ.வி., 5மீ நீளம் உள்ள 7 சீட்டர் எஸ்.யூ.வி.,
'எம்.ஜி.,' நிறுவனம், 'மெஜெஸ்டர்' என்ற இந்தியாவின் பெரிய எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. இது, 'கிளாஸ்டர்' எஸ்.யூ.வி.,க்கு அடுத்த நிலையில் இடம்பெற்றுள்ளது. ஐந்து மீட்டர் நீளம் உள்ள இந்த எஸ்.யூ.வி., ஆறு மற்றும் ஏழு சீட்டர் மாடல்களில் வந்துள்ளது. இந்த காரில், ஏற்கனவே உள்ள 2.0 லிட்டர், டுவின் டர்போ, டீசல் இன்ஜின் வருகிறது. இந்த இன்ஜின், 8 - ஸ்பீடு ஆட்டோ கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 'லேடர் ஆன் பிரேம்' சேசிஸில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார், 2 வீல் மற்றும் 4 வீல் டிரைவ் அமைப்பில் வந்துள்ளது. எளிதாக ஆப்ரோட் செய்ய மூன்று டிப்ரன்சியல் லாக், 'க்ரால் கன்ட்ரோல் மோட்' வசதி, 810 எம்.எம்., நீரில் பயணிக்கும் திறன், அதிக உட்புற இடவசதி ஆகியவை இதன் சிறப்பம்சங்கள்.