சணி எஸ்.ஒய்.35யு., புரோ பவர்ஹவுஸ் மினி எக்ஸ்கவேட்டர்
'சணி' நிறுவனம், 'எஸ்.ஒய்.35யு., புரோ' என்ற மினி எக்ஸ்கவேட்டரை அறிமுகம் செய்துள்ளது. 3.5 டன் எடை பிரிவில் வரும் இந்த எக்ஸ்கவேட்டர், உள்நாட்டு சந்தைக்கு பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்கவேட்டரில் 28 ஹெச்.பி., பவர் கொண்ட 'யான்மார்' டீசல் இன்ஜின் பயன்படுத்தப் படுகிறது. இது, எரிபொருள் செலவை குறைத்து, குழி தோண்டுவதற்கு அதிக பவர் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் உள்ள ஹைட்ராலிக் அமைப்புகளை, 5,000 மணி நேரத்திற்கு ஒரு முறை பராமரித்தால் போதும்.