உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / ஆக்டாவியா வி.ஆர்.எஸ்., காரின் அடுத்த தொகுப்பு 2026 ஜனவரியில் வருகை

ஆக்டாவியா வி.ஆர்.எஸ்., காரின் அடுத்த தொகுப்பு 2026 ஜனவரியில் வருகை

'ஸ்கோடா' நிறுவனத்தின் 'ஆக்டாவியா வி.ஆர்.எஸ்.,' அதிவேக செடான் காரின் இரண்டாம் தொகுப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் வர இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. முன்பதிவு துவங்கிய 20 நிமிடங்களில், இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட 100 கார்கள் கொண்ட முதல் தொகுப்பு விற்பனையாகி, கார் பிரியர்களிடம், இந்த கார் நல்ல வரவேற்பை பெற்றது. இதுகுறித்து இந்நிறுவனத்தின் பிராண்ட் இயக்குநர் ஆஷிஷ் குப்தா கூறியதாவது: ஆக்டாவியா வி.ஆர்.எஸ்., காருக்கு 350க்கும் அதிகமான முன்பதிவுகள் பெறப்பட்டுள்ளன. அடுத்த முன்பதிவு துவங்குவதற்கு முன், ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆண்டுக்கு 2,500 கார்களை இறக்குமதி செய்யும் விதிமுறையின் படி, அதிக கார்களை கொண்டுவர முயற்சி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ