UPDATED : பிப் 25, 2026 08:39 AM | ADDED : பிப் 25, 2026 07:53 AM
'டி.வி.எஸ்.,' நிறுவனம், குஜராத்தின் 'ரான் உட்சவ்' திருவிழாவை முன்னிட்டு, பைக் பயணத்தின் வாயிலாக கலாச்சார சுற்றுலாவை நடத்தியது. அங்கு இரண்டாவது முறை நடக்கும் இந்த சுற்றுலாவில், வெளிநாட்டவர்கள் உட்பட 100க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
உலகின் பெரிய உப்பு சதுப்பு நிலங்களில் ஒன்றான 'ரான் ஆப் கட்ச்' பகுதியின் கலை, இசை, நடனம் மற்றும் கைவினைப் பொருட்களை நேரடியாக அங்கு சென்று அனுபவிக்க இந்த சுற்றுலா நடத்தப்பட்டது. இதில், ஐந்து 'ரான் ஆப் கட்ச் எடிஷன்' பைக்குகளை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. மேலும், பைக் ஸ்டண்ட் ஷோ, ஆப்ரோடிங் அனுபவம், பைக் டிரிப்ட் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.