உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / அல்ட்ராஒய்லெட் இ.வி., பைக் 10 ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம்

அல்ட்ராஒய்லெட் இ.வி., பைக் 10 ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம்

மி ன்சார இருசக்கர வாகன உற்பத்தியாளரான 'அல்ட்ராஒய்லெட்' நிறுவனம், அதன் இரு மின்சார பைக்குகளை 10 ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்துள்ளது. இது, ஐரோப்பிய சந்தையில் நுழையும் முதல் இந்திய மின்சார இருசக்கர நிறுவனம் ஆகும்.ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், அயர்லாந்து, ஆஸ்ட்ரியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்ஸ்சம்பர்க் ஆகிய 10 நாடுகளில், அதன் 'எப் 77 மேக்2, எப்77 சூப்பர் ஸ்ட்ரீட்' ஆகிய இரு பைக்குகளையும் அறிமுகம் செய்துள்ளது.'எப்77' மின்சார பைக், இந்தியாவின் வேகமான மின்சார பைக்காகும். 2.8 வினாடியில், 60 கி.மீ., வேகத்தை எட்டும் திறன் உடையது. அதிகபட்சமாக 155 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த பைக், ஒரு சார்ஜில், 211 கி.மீ., முதல் 311 கி.மீ., ரேஞ்ச் வரை தருகிறது. இந்த பைக், 7.1 மற்றும் 10.3 கி.வாட்.ஹார்., என இரு பேட்டரிகளில் வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை