டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., 100 மொபேட் அலாய், டியூப்லெஸ் டயருடன் வருகை
'டி.வி.எஸ்.,' நிறுவனம், 'எக்ஸ்.எல்., 100' என்ற மொபேட் வாகனத்தை மேம்படுத்தி 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபேட், 46 ஆண்டுகளுக்கும் மேல் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ளது. 'ஹெச்.டி., அலாய்' என்ற உயர் ரக மாடலில், 16 அங்குல அலாய் சக்கரங்கள், டியூப் லெஸ் டயர்கள், எல்.இ.டி., ஹெட் லைட் உள்ளிட்ட அம்சங்கள் முதல் முறையாக வருகின்றன. சிறு, குறு தொழில் செய்பவர்கள், பின்புற சீட்டுக்கு பதிலாக சரக்கு ஏற்றும் வகையில் சீட்டை கழட்டி பயன்படுத்தி கொள்ளலாம். யூ.எஸ்.பி., சார்ஜிங் போர்ட், சத்தம் இல்லாத எலக்ட்ரிக் செல்ப் ஸ்டார்ட், மேம்படுத்தப்பட்ட டெயில் லைட், இரு ட்ரம் பிரேக்குகள், டெலிஸ்கோப்பிக், டூயல் ஷாக் அப்சார்பர்கள் ஆகியவை இதன் அம்சங்கள். இதில், 99.7 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்ஜினுடன் சிங்கிள் ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 89 கிலோ எடை உள்ள இந்த வாகனம், 150 கிலோ எடையை சுமக்கும் திறன் உடையது. 65 கி.மீ., மைலேஜ், 60 கி.மீ., வேகம், 4 லிட்டர் பெட்ரோல் டேங்க், 787 எம்.எம்., சீட் உயரம், 145 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ் கிடைக்கிறது. இந்த வாகனம், மூன்று நிறங்களில், ஐந்து மாடல்களில் வந்துள்ளது. இன்ஜின் - 99.7 சிசி பவர் - 4.3 ஹெச்.பி., டார்க் - 6.5 என்.எம்., வாகன எடை - 89 கிலோ பேலோட் - 150 கிலோ டேங்க் - 4 லிட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் - 145 எம்.எம்., மைலேஜ் - 65 கி.மீ., விலை: ரூ. 48,000 - ரூ. 61,850