உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / செய்திகள் /  சொத்து வாங்கும் போது கிரைய பத்திரம் எழுதும் போது கவனிக்க வேண்டியவை!

 சொத்து வாங்கும் போது கிரைய பத்திரம் எழுதும் போது கவனிக்க வேண்டியவை!

வீ டு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது அது தொடர்பான உரிமை பத்திரங்களை மிக கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். அதில் எந்த வில்லங்கமும் இல்லை என்பதை முழுமையாக உறுதி செய்து கொண்டு செயல்படுவது அவசியம். இதில் சொத்து விற்பவர் யார் அவர் பெயருக்கு அந்த சொத்து எப்படி வந்தது என்பதற்கான பத்திரத்தின் அசல் பிரதி அவசியம். தற்போது சொத்தை விற்பவருக்கு அதை விற்ற நபர் எப்படி சொத்தை பெற்றார் என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டியது அவசியம். இதற்காக தான் ஒரு சொத்து வாங்கும் போது நடப்பு ஆவணம் மட்டுமல்லாது, தாய்ப்பத்திரம் எனப்படும், முந்தைய ஆவணத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். இந்த பத்திரங்களை கேட்டு வாங்கி படித்து பார்த்தால் மட்டும் போதாது. அந்த பத்திரங்களில் உள்ள விபரங்களை புதிதாக எழுதப்படும் கிரையப்பத்திரத்தில் முறையாக சேர்க்க வேண்டியது அவசியம். இதில் நீங்கள் வாங்கும் சொத்துக்கான பத்திரப்பதிவுக்கு பத்திரம் எழுத யாரை அணுக வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. பெரும்பாலான சமயங்களில் மக்கள் ஆவண எழுத்தர்களை நாடுவது வழக்கம். இதற்காக நீங்கள் தேர்வு செய்யும் ஆவண எழுத்தர் முறையாக உரிமம் பெற்றவர் என்பதை உறுதி செய்துக்கொண்டு அவரிடம் பணிகளை ஒப்படைப்பது பாதுகாப்பானதாக அமையும். ஆனால், வழக்கறிஞர்களை பயன்படுத்தி பத்திரம் எழுதுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. பத்திரங்களை ஆய்வு செய்து கொடுக்கும் வழக்கறிஞரே புதிய கிரைய பத்திரத்தை தயாரித்தால் அது சரியாக இருக்கும் என்று மக்கள் நினைக்கின்றனர். இதன் காரணமாக, புதிய பத்திரம் தயாரிக்கும் பணிகளை வழக்கறிஞர்களிடம் ஒப்படைப்பதில்மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதை தவறு என்று யாரும் சொல்லவில்லை, அதே நேரத்தில் பத்திரங்களை ஆவண எழுத்தர்களை காட்டிலும், வழக்கறிஞர்கள் சுருக்கமாக எழுதுவதாக கூறப்படுகிறது. பத்திரங்களை சுருக்கமாக எழுதுவதால், அவசியமான பல்வேறு விபரங்கள் விடுபட வாய்ப்புள்ளது. எனவே, தாய்ப்பத்திரம், நடப்பு பத்திரம் ஆகியவற்றில் உள்ள சர்வே எண்கள், அதில் ஏற்பட்ட மாறுதல்கள், தற்போதைய நிலவரம் ஆகிய விபரங்கள் தவறாது இடம் பெற வேண்டும் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள். பாயிண்ட் வழக்கறிஞர்களை பயன்படுத்தி பத்திரம் எழுதுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது, பத்திரங்களை ஆய்வு செய்து கொடுக்கும் வழக்கறிஞரே புதிய கிரைய பத்திரத்தை தயாரித்தால் அது சரியாக இருக்கும் என்று மக்கள் நினைக்கின்றனர். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை