உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / வீடு பராமரிப்பு / வீட்டில் துர்நாற்றத்தை போக்க இதை டிரை பண்ணுங்க..!

வீட்டில் துர்நாற்றத்தை போக்க இதை டிரை பண்ணுங்க..!

வீடுகளில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சந்தையில் பல நறுமணங்களில் ஏராளமான ரூம் ஸ்பிரேக்கள் கிடைக்கின்றன. ஆனால், அதில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். எனவே வீட்டில் எளிமையான முறையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி நறுமணம் கமழ செய்ய இதனை பின்பற்றலாம்.

1. காபி கொட்டைகள் :

உங்கள் வீட்டில் துர்நாற்றம் வீசுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் குப்பை தொட்டியில் ஒன்றிரண்டு காபி கொட்டைகளை போட்டு வையுங்கள். துர்நாற்றம் குறைந்து காபியின் நறுமணம் வீசும்.

2. வாசனை மெழுகுவர்த்திகள் :

வாசனை மெழுகுவர்த்திகளை அறையில் ஏற்றி வைப்பது நறுமணத்தை பரப்பும். மேலும் மனநிலையை மாற்றிவிடும் ஆற்றல் இதற்கு உண்டு. ரோஜாக்கள், லாவெண்டர் மற்றும் மல்லிகை போன்ற மலர்களின் நறுமணம் உங்களை அமைதியாகவும் நிதானமாகவும் உணர உதவுகிறது.

3. எசென்சியல் ஆயில் :

தாவரங்களிலிருந்து செறிவூட்டப்பட்டு பிரித்தெடுக்கப்படும் எசென்சியல் ஆயில் சிறந்த மணம் கொண்டது. இது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. சிறிய பாட்டியில் எசென்சியல் ஆயிலை ஊற்றி, கோரை புல்லை மேல் வைத்து விடுங்கள். மனசை லேசாக்கும் மணம் எப்போதும் அறையில் கமழும்.

4. தி சிம்மர் வே :

ஆரஞ்சு பழங்களை துண்டுகளாக்கி ,ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீரை ஊற்றி, அதனுடன் கிராம்பு, லவங்கப்பட்டை போட்டு அடுப்பில் வையுங்கள். கொதிக்கும் முன் இறக்கி, கொஞ்சம் ஆறியவுடன், அறையில் ஸ்பிரே செய்தால், அதன் மணம் அருமையாக இருக்கும்.

5. பேக்கிங் சோடா :

இயற்கையான டியோடரைசிங் பண்புகள் கொண்ட பேக்கிங் சோடா, வீட்டின் பல்வேறு பகுதிகளில் வாசனையை பரப்ப பாதுகாப்பான ஒன்றாகும். செல்லப்பிராணிகள், சமையல் அல்லது பிறவற்றால் ஏற்படும் நாற்றங்களை உறிஞ்சி அகற்றுவதற்கு, தரைவிரிப்புகள், விரிப்புகளில் சிறிது பேக்கிங் சோடாவைத் தெளிக்கலாம்.

6. சிம்பிள் ரூம் ஸ்பிரே :

வீட்டில் முக்கால் கப் காய்ச்சி எடுத்த தண்ணீரில், காய்ந்த துளசி இலைகளை போட்டு வீட்டுமுறையில் ரூம் ஸ்பிரே தயாரிக்கலாம். சில நிமிடம் கழித்து, அதனுடன் லெமன் எசென்சியல் ஆயில் சேர்த்து, அறையில் ஸ்பிரே செய்து துர்நாற்றத்தை போக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி