உள்ளூர் செய்திகள்

ஒரு ஊர்ல ஒரு பாட்டி!

தாயுமாகி நிற்கும் தந்தையின் கதை களும், தந்தையுமாகி சாதிக்கும் தாயின் கதைகளும் நமக்கு பரிச்ச யம். இது, ஒரு பாட்டியானவள் தன் பேரனுக்கு யாவுமாகி நிற்கும் கதை!'என் பிரசவத்துக்காக 20 வயசுல தாய் வீட்டுக்கு வந்தேன். அதுக்கப்புறம், கணவர் வீட்டுக்கு போக முடியாத சூழல். என்னை மாதிரியே நிறைமாச கர்ப்பிணியா என் வீட்டுக்கு வந்த என் ஒரே மகளும் புகுந்த வீடு திரும்பலை! பேரன் தினேஷுக்கு மனவளர்ச்சி குறைபாடு; 13 வயசுலேயும் குழந்தை மனசோட இருக்குறான்!' - திறந்த புத்தகமாய் தன் வாழ்வை சொல்லும் லதா பாட்டிக்கு வயது 58.விருதுநகர் மாவட்டம் சிவகாசி, கீழத்திருத்தங்கல்லில் வசிக்கும் லதா, தன் இளம் வயது மகளுக்கு இன்னொரு நல்வாழ்க்கை அமைத்து தந்துவிட்டு, பேரனை தன் பொறுப்பில் பராமரிக்கிறார். தினேஷிற்கான சிகிச்சை, சிறப்பு கல்வி, அரசு சலுகைகளை தன் தொடர் முயற்சியால் போராடி பெற்றிருக்கிறார்.கடவுள்கிட்டே உங்க வேண்டுதல் என்னம்மா?'குடியே கதி'ன்னு கிடந்த இரண்டு ஆண்களால என் வாழ்க்கையும் போச்சு; என் மகளோட முதல் வாழ்க்கையும் போச்சு. 'பொறுப்பின்மை'க்கு விதியை காரணமாக்க என்னால முடியாது. ஆனா, என் பேரனோட பிறப்பை 'விதி'ன்னு ஏத்துக்குறேன். 'உயிர் பிழைக்க மாட்டான்'னு நினைச்சேன்; இப்போ, அவன் எழுந்து நடக்குறான். சொல்றதை உள்வாங்கிக்கிறான்; இதெல்லாம், 'கடவுள் செயல்'னு நம்புறேன். அப்பப்போ, எனக்கு நெஞ்சு வலி வரும். அந்த வலி சமயங்கள்ல, 'என் பேரன் ஆயுசு இருக்குற வரைக்கும் எனக்கும் ஆயுசு கொடு முருகா'ன்னு வேண்டிக்கிறேன்!ஆரம்ப கல்வி தாண்டாத லதா, பேரனை இடுப்பில் சுமந்தபடி திருநெல்வேலி, சென்னை, திருவனந்தபுரம் ஊர்களில் சிகிச்சைக்காக அலைந்திருக்கிறார். இவரது தொடர் முயற்சியின் பலனாக, கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஆனையூர் குடியிருப்பில் வீடு கிடைத்துள்ளது. 'உங்கள் பேரனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை தரப்படும்' எனும் உத்தரவாதத்தோடு, வீட்டின் அருகே உள்ள சிறப்பு பள்ளியிலும் இடம் தந்திருக்கிறது அரசு! இனிமேலாவது நிம்மதி கிடைக்கும்னு நம்புறீங்களாம்மா?இப்பவே நான் நிம்மதியாத்தான் இருக்குறேன். எனக்கும் அவனுக்கும் அரசு சார்புல கிடைக்கிற உதவித்தொகை ஓரளவுக்கு கைகொடுக்குது. வீடு முழுக்க சிறுநீர் கழிக்கிறான். எந்த நேரமும் சிரிச்சுக்கிட்டே இருக்குறான். தன் உலகத்துக்குள்ளே அவன் என்னையும் இழுத்துக்கிட்டதால என் மனசுல எந்த குறையும், ஏக்கமும் இல்லை. நாங்க திருப்தியா இருக்குறோம்.எல்லார் வாழ்க்கையிலும் கடவுள் கடவுளாகவே வருவதில்லை; தினேஷ் வாழ்வில் பாட்டி லதாவாக வந்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !