உள்ளூர் செய்திகள்

முதல்வர் பேசுகிறேன்!

வணக்கம்... நான் சாந்தகுமாரி ராமசாமி. சென்னை சவுகார்பேட்டை மூங்கி பாய் கோயங்கா பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை. 28 ஆண்டுகள் பணி அனுப வம் பெற்றவள். ஆனாலும், புதியதை கற்றுக்கொள்ளும் ஆர்வமும், அதன் வழி அனுபவம் தேடிப்பகிரும் பக்கு வமும் கொண்ட 53 வயது மாணவி.பசி - கல்விவறுமையான வீட்டுச்சூழல்ல படிக்கிற ஒரு மாணவி. காலை உணவு அவளுக்கு எப்போதுமே கிடையாது. ஒருநாள், நான் பணம் கொடுத்தேன்; 'வேண்டாம் டீச்சர்; நாளைக்கும் வயிறு கேட்கும்'னு சொல்லிட்டா! பசி தாங்க பயிற்சி எடுக்கிறான்னு நல்லா புரிஞ்சது; அவளோட கல்வி அவ தலையெழுத்தை திருத்தி எழுதும்னு நான் நம்புறேன்; துணை நிற்கிறேன்!உண்மை - உயரம்மாறுவேடப் போட்டி மேடை; வேலு நாச்சியார், சாவித்ரிபாய் புலே... ஆளுமைகளுக்கு மத்தியில என்னால அடையாளம் காண முடியாத இரண்டு பேர். 'அவங்க 'இக்கால அவ்வையார்'னுதிரு.வி.க., பாராட்டின அசலாம்பிகை அம்மையார்; பெண்ணடிமைக்கு எதிரா போராடின அம்புஜத்தம்மாள்'னு மாணவியர் சொன்னாங்க; தெரியாததை தெரியாதுன்னு ஒத்துக்குற பக்குவம் எனக்குண்டு!இயற்கை - வாசிப்பு'இயற்கையைத் தவிர இந்த உலகத்தை அதிகாரம் செய்ற உரிமை யாருக்கும் கிடையாது'ங்கிறதை வாசிப்பு, நாங்க பராமரிக்கிற செடிகள், வளர்க்கிற பறவைகள் மூலமா மாணவ மாணவியருக்கு உணர்த்துறேன். பள்ளி நுாலகத்துல இலக்கியம், வாழ்க்கை வரலாறு, சிறுகதை, புனைவுன்னு தமிழ்/ ஆங்கிலத்துல 5,000 புத்தகங்கள் இருக்கு; வாரம் இரண்டு நாட்கள் வாசிப்பு கட்டாயம்!எல்லை - கல்விநான் உயிரியல் ஆசிரியை. என் பணி அனுபவத்துல உடல் தொடர்பான பாடங்களை முறையா நடத்தாம பல ஆசிரியர்கள் கடந்து போறதை கவனிச்சிருக்கேன். இம்மாதிரியான பாடங்களை புரிய வைக்கிறப்போ, 'எது எல்லை'ன்னு எனக்கு நல்லாத் தெரியும். இதை உணர்ந்து முறையா கற்றுக் கொடுக்கிறேன்; கற்றுக்கொடுக்க சக ஆசிரியர்களுக்கு உதவுறேன்!வளர்ச்சி - நேர்மைகண்காணிப்பு இல்லாத நேரத்துலேயும் நேர்மை தவறாம இருக்கிறதுதான் உண்மையான ஒழுக்கம்! இந்த ஒழுக்கத்தை பள்ளியில வளர்க்கிற கடமை இருக்குறதால, பொறுப்புகளை தகுதியான நபர்கள்கிட்டே ஒப்படைக்கிறேன். இதனால, பொய்கள் ஒழியுது; நேரமும் வீணடிக்கப்படுறது இல்லை! நான் இல்லாத நேரங்கள்லேயும் நிர்வாகம் முறையா நடக்குது; 100 சதவீத வெற்றி சாத்தியமாகுது!பெண் - உலகம்'பெண்... இந்த சமூகத்தோட முதுகெலும்பு; ஒருபோதும் சுயநலமா சிந்திக்கத் தெரியாத அவளாலதான் உலகம் வளர்ச்சிப் பாதையில இயங்கிட்டு இருக்கு'ன்னு மனப்பூர்வமா நான் நம்புறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !