திருமதி. விவசாயி
'பசி... வாழ்வில் பல பாதைகளை திறந்துவிடும்' என்பதற்கு வாழும் உதாரணம் மஞ்சுளா. இவர்... முன்னோடி தேனி வளர்ப்பாளர்; பயிற்சியாளர்; தேன் சேகரிப்பாளர்; 32 வகையான தேன் மதிப்புக்கூட்டு பொருட்களின் தயாரிப்பாளர்!மஞ்சுளா எனும் நான்...ஏழு வயசுல ஒரு ரூபா சம்பளத்துக்கு விவசாய கூலியா வேலைக்குப் போனேன். பசிக்கு மக்காச்சோளம் மட்டும்தான்! கல்யாணத்துக்கு அப்புறம் கணவரோட சேர்ந்து நிலக்கடலை, மஞ்சள், தேன்வாழை, காய்கறி விவசாயம். இப்போ, தேனீ வளர்ப்புல, 11 வருஷ அனுபவம்!கரும்பு சாகுபடி, இயற்கை விவசாயம், வாழை தொழில்நுட்பம், காளான் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு பயிற்சின்னு கத்துக்கிட்டே இருக்குறேன். இன்னைக்கு இவ்வளவு நேரம்தான்னு கணக்கு பார்க்காம உழைக்கிறேன்.ஓசூர், தேன்கனிக்கோட்டை மலைவாழ் மக்களுக்கு தேனீ வளர்ப்பு முறையை கற்றுக் கொடுத்து அவர்களின் வருமானத்திற்கு காரணமாகி இருக்கிறார் மஞ்சுளா. விவசாய நிலங்களில் தேனீ பெட்டிகள் வைத்து, தேனீக்கள் மூலம் மகசூல் பெருக்கும் அயல் மகரந்த சேர்க்கை பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு தருகிறார். தேன் உற்பத்தியில சாதிச்சிட்டீங்களா?துவக்கத்துல, வெறும் 6,000 ரூபாய் முதலீட்டுல ரெண்டு தேனீ பெட்டி மூலமா, அரை கிலோ தேனெடுத்து விற்க நாலு மாசம் ஆச்சு. இன்னைக்கு... எங்க சொந்த நிலம், குத்தகை நிலம், விவசாயிகளோட நிலங்கள்ல 600 பெட்டிகள் வைச்சு, வருஷத்துக்கு 2 டன் தேனெடுத்து தரச்சான்றிதழோட விற்பனை பண்றேன்.தித்திக்கும் தேன்சளியை குணமாக்கும் வேம்பு தேன், இரும்புச் சத்து அதிகமுள்ள அடுக்கு தேன், ஜீரண சக்தி பெருக்கும் கொம்பு தேன், நுண்ணிய கொசுத்தேனீக்கள் மூலிகைப்பூக்களில் சேகரிக்கும் கொசு தேன்... இப்படி தேன்ல நிறைய வகைகள் இருக்கு. என்னென்ன மதிப்பு கூட்டு பொருட்கள்?பூண்டோடு தேன் கலந்து பூண்டு தேன், அதே அடிப்படையில... பேரீட்சை தேன், மிளகு தேன், அத்திப்பழ தேன், விளாம்பழ தேன், பலாப்பழ தேன்... இப்படி நிறைய! சீசனுக்கு ஏத்த மாதிரி தேன் அல்வா, தேன் ஜெல்லி, தேன் நெல்லி, தேன் சாக்லேட்டும் தயாரிக்கிறோம். மஞ்சுளா பார்த்திபனின்...வயது: 43படிப்பு: இல்லைபிள்ளைகள்: கல்லுாரி செல்லும் ஒரு மகன்பெருமை: திருமதி விவசாயிஈரோடு மாவட்டம் கொளப்பலுார் 8 கி.மீ.,/ கோபி - தாராபுரம் சாலையின் கொளப்பலுாரில் உள்ளது மஞ்சுளாவின் தோட்டமும், தேனீ பண்ணையும்!அரசுக்கு ஒரு வேண்டுகோள்!மருத்துவ குணமிக்க தேனை அரசு கொள்முதல் பண்ணி நியாய விலைக் கடைகள் மூலமா மக்களுக்கு கொடுக்கணும்.