உள்ளூர் செய்திகள்

திருமதி விவசாயி!

ஏழு ஏக்கரில் தக்காளி, கத்தரி, சின்ன வெங்காயம், மிளகாய், கொத்தவரங்காய் உள்ளிட்ட காய்கறிகளை விளைவிக்கிறார் திருப்பூர் கோமதி. விவசாயியை அறிதல்'விளைவிக்கிற காய்கறிகளோட தரம் நுகர்வோருக்கு திருப்தி தந்ததாங்கிறது விவசாயிக்கு தெரியணும்; இதுக்கு, இரண்டு தரப்புக்கும் இடையில ஒரு பிணைப்பு அவசியம். குடும்ப மருத்துவர் மாதிரி குடும்ப விவசாயி அவசியம்'னு என் கணவர் அடிக்கடி சொல்வார். என் சந்தைஇயற்கை விவசாயத்தோட சிறப்பையும், எங்க உழைப்பையும் சமூக வலைதளங்கள் மூலமா மக்களுக்கு புரிய வைச்சோம். இன்னைக்கு, சென்னையில சில குடியிருப்புவாசிகள் எங்களோட நிரந்தர வாடிக்கையாளர்கள். இரவு அனுப்பி வைக்கிற காய்கறிகளுக்கு மறுநாள் பகல்ல வங்கி கணக்குக்கு பணம் வந்திடுது. கம்பீர வாழ்க்கைபோதுமான பொருளாதார சூழல் இருக்கு; எங்க பணியாளர்களுக்கு நிறைவான கூலி தர்றோம். வீட்ல, 'டிவி' கிடையாது; அதனால, உலகம் வேகமா ஓடுதுங்கிற பதற்றம் இல்லை. நாவல்பழ விதையை பொடியாக்கி அதுல தேநீர் போட்டு குடிச்சு, கால்நடைகள் சூழ இயற்கையோடு இணைஞ்சு வாழ்றோம்.பல்லடத்தில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் 18 கி.மீ. தூரத்தில் உள்ளது கோமதியின் கருடமுத்துார் கிராமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !