உள்ளூர் செய்திகள்

திருமதி விவசாயி!

திருப்பூர் தாராபுரத்தின் மூலனுார் கிராமம். மூன்று ஏக்கர் நிலத்தில் நாட்டு முருங்கை சாகுபடி செய்யும் சுகந்தி சண்முகம், கடந்த மூன்று ஆண்டுகளாய் முருங்கைக்காய்களை பறிப்பதில்லை; மரத்திலேயே முற்ற விடுகிறார்! காரணம்...'ருசி அதிகமுள்ள ஒரு கிலோ நாட்டு முருங்கையை கிலோ 7 ரூபாய்க்கு வாங்கி, கடையில ஒரு காய் 7 ரூபாய்னு விற்கிறாங்க! இந்த கொள்ளையில எனக்கு உடன்பாடு இல்லாததால, 'முருங்கை எண்ணெய்' தயாரிக்க முடிவு பண்ணிட்டேன்!' என்கிறார்.முருங்கை எண்ணெய்ஒரு முருங்கைக்காய்ல 8 - 9 விதைகள் இருக்கும். ஒரு கிலோ விதை எடுக்க 35 - 40 கிலோ முருங்கைக்காய் வேணும். ஆறு கிலோ விதை இருந்தாத்தான் ஒரு லிட்டர் எண்ணெய் கிடைக்கும். ஒரு லிட்டர் எண்ணெய் 5,000 ரூபாய். மூட்டு வலி குணமாக, பார்வைத் திறன் அதிகரிக்க, உள் உறுப்புகள் சுத்தமாக தினமும் 4 - 5 மி.லி., முருங்கை எண்ணெயை சமையல்ல சேர்த்துக்கலாம். தொழு உரம்இரண்டு மாடுகள், 35 ஆடுகள் வளர்க்கிறேன். அதனால, தோட்டத்துக்கு தொழு உரம் மட்டும்தான்! நாட்டு முருங்கையில பூச்சி தாக்குதல் அதிகம் இருக்காதுங்கறதால பூச்சிக்கொல்லிகளுக்கான அவசியமும் இல்லை. பிறந்த வீடும், புகுந்த வீடும் விவசாய குடும்பம் என்றபோதும், திருமணத்திற்குப் பின் குடும்ப பொறுப்புகளும் மகனுமே கதியென இருந்த சுகந்தியை காலமே களத்தினுள் இழுத்து வந்திருக்கிறது! விதியின் கைப்பிடித்து...ஆபத்தான நான்காவது நிலையிலதான் கணவருக்கு நுரையீரல் புற்று தெரிய வந்தது. 'இன்னும் மூணு மாசம்தான்'னு மருத்துவர்கள் சொல்லிட்டாங்க; 'ஆரோக்கியமான உணவுகளால வாழ்நாளை கூட்டலாம்'னு நண்பர்கள் நம்பிக்கை தந்தாங்க; பாரம்பரிய அரிசிகள், இயற்கை விவசாயம் பக்கம் கவனத்தை திருப்பினேன்; அவரோட ஆயுள் இரண்டு ஆண்டுகள் நீண்டது! அவர் மறைவுக்கு அப்புறம் முழுநேரமா விவசாயத்துல இறங்கிட்டேன்!எண்ணெய் தயாரிப்பு தவிர்த்து...?என் மண்ணுல நெல் விளையாது. அதனால, நாட்டு நெல் வகைகளை சேகரிச்சு கொடுக்குறேன்; விற்பனைக்கும் உதவுறேன். குத்தகை நிலத்துல அறுபதாங்குறுவை, மாப்பிள்ளை சம்பா சாகுபடி முயற்சியில தீவிரமா இறங்கியிருக்கேன்; எல்லாம் வசப்படும்.தாராபுரம் - கரூர் சாலையில் 27 கி.மீ., தொலைவில் இருக்கிறது மூலனுார் கிராமம்.அரசுக்கு ஒரு வேண்டுகோள்!நாட்டு ரக விளைச்சலுக்குன்னு தனி விற்பனைக்கூடம் அமைச்சுக் கொடுத்தா நாட்டு ரகங்களை பாதுகாக்க முடியும்!சுகந்தி சண்முகத்தின்வயது - 42படிப்பு - பிளஸ் 2பிள்ளை - ஒரு மகன்பொழுதுபோக்கு - வாசிப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !