இப்படித்தான் வாழ்கிறேன்!
வணக்கம்... நான் கிருஷ்ணவேணி. கிருஷ்ணகிரி கெலமங்கலம் பக்கத்துல இருக்குற இருளர்பட்டிதான் என் சொந்த ஊர். நான் பிளஸ் 2 தேர்வுல தேர்ச்சி அடைஞ்சிருக்கேன். இது என்ன பெரிய விஷயம்னு நினைக்கிறீங்களா; எங்க கிராமத்துல பிளஸ் 2 வரைக்கும் போயி தேர்ச்சி பெற்ற முதல் நபர் நான்தான்! ஊரடங்கு நேரத்துல வேணியோட பொழுதுபோக்கு?காட்டு வேலைக்கு போனேன்! ஐஸ்கிரீம்ல பிடிச்ச ப்ளேவர்?எனக்கு குச்சி ஐஸ் மட்டும்தான் தெரியும். 'செல்பி' மோகம் உண்டா?தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சங்கீதா மேடம் கூட நான் 'செல்பி' எடுத்திருக்கேன். கமலா ஹாரிஸ் பற்றி...யார் அவங்க?வருஷத்துக்கு எத்தனை புத்தாடை வாங்குவீங்க?ஒண்ணு அல்லது ரெண்டு!எங்க ஊர்ல இருந்து சரியான போக்குவரத்து வசதி இல்லாததால, ஆறாம் வகுப்புல இருந்து பிளஸ் 2 வரைக்கும் விடுதியில தங்கிதான் படிச்சேன். காலாண்டு, அரையாண்டு விடுமுறைக்கு மட்டும் தான் வீட்டுக்கு வருவேன். எங்க ஊர் வழக்கப்படி, எட்டாம் வகுப்போட படிப்பை நிறுத்திட்டு கல்யாணம் பண்ணி வைச்சிடுவாங்களோன்னு பயந்தேன்.எங்கப்பா முனிராஜும், அம்மா நாகம்மாவும் என்னை படிக்க வைக்கணும்னு உறுதியா இருந்தாங்க; நான் பிளஸ் 2 முடிச்சதுல, ஊர்ல இருக்குற நிறைய பொண்ணுங்களுக்கு சந்தோஷம்!விடுதி வாழ்க்கைகடந்த ஏழு ஆண்டுகள்ல, நான் வீட்டுல இருந்த நாட்களைவிட விடுதியில இருந்த நாட்கள்தான் அதிகம். அதனால, மனசு விரும்புற உணவுகளை நான் சாப்பிட்டதில்லை. அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் கூட வெளியே எங்கேயும் போனதில்லை. ஆனா ஒண்ணு... இந்த விடுதி வாழ்க்கை மட்டும் அமையாம போயிருந்தா, நான் என்னவாகியிருப்பேன்னு கற்பனைகூட பண்ணிப் பார்க்க முடியலை. அடுத்த திட்டம்கிருஷ்ணகிரி அரசு ஆசிரியர் பயிற்சி கல்லுாரியில் விடுதி மாணவியாக சேர்ந்துள்ள கிருஷ்ணவேணி, கூடவே தொலைதுார கல்வி வாயிலாக இளங்கலை பட்டம் பயிலும் முடிவில் இருக்கிறார். 'ஏன் இரட்டை குதிரை சவாரி?' என்றால் 'நான் முன்னேற ஒரு குதிரையோட வேகம் பத்தாது' என்கிறார். முதலில் ஆசிரியர், அதற்கடுத்து ஐ.ஏ.எஸ்., என கிருஷ்ணவேணிக்கு கனவுகளும் இரண்டு!'ஏன்டா இங்க பிறந்தோம்'னு கிருஷ்ணவேணி நினைச்சதுண்டா?'பொண்ணுங்களை படிக்க வைக்கக்கூடாது'ங்கிறது எங்க ஊர் மக்களோட எண்ணமில்லை. போதிய விழிப்புணர்வு இல்லாததால அவங்க அப்படியே தேங்கி நின்னுட்டாங்க. உள்ளடங்கிய கிராமங்களுக்கும் அரசின் வழிகாட்டுதல்கள் வந்தா, என்னை மாதிரி நிறைய கிருஷ்ணவேணிகள் மேல வருவாங்க.