இப்படித்தான் வாழ்கிறேன்!
வணக்கம். நான் ரோஜா; விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் மரூர் கிராமவாசி; இருளர் சமூகத்தைச் சேர்ந்த பொண்ணு நான்.உங்க ஊருக்கு உடனடியா என்ன வசதி வேணும் ரோஜா?நிறைய புத்தகங்கள் இருக்குற ஒரு நுாலகம்! உங்களை ரொம்ப பயமுறுத்துற விஷயம்?அப்பாவோட பார்வை!பெரிய ஆசை ஏதாவது?அம்மாவையும் அப்பாவையும் விமானத்துல அழைச்சுட்டுப் போய் இந்த உலகத்தை காட்டணும்!வீட்டுல எத்தனை லிட்டர் ப்ரிஜ் இருக்கு?இப்போதான் எங்க தெருவுல ஒரு வீட்டுக்கு அது வந்திருக்கு; நாங்க வாங்க நாளாகும்!பிடிச்ச பண்டிகை...?'எல்லாரும் சமம்'னு உணர்த்துற சமத்துவ பொங்கல் விழா!அம்மாவுக்கும் அப்பாவுக்கும் செங்கல் சூளையில வேலை. நான், தம்பி, தங்கச்சி எல்லாரும் பாட்டி வீட்டுலதான் வளர்ந்தோம். எட்டு மாதம் தொடர்ச்சியா வேலை பார்த்துட்டு, நான்கு மாதம் அப்பா - அம்மா எங்க கூட இருப்பாங்க. லீவு கிடைக்கிறப்போ நாங்களும் சூளைக்கு போய் கல் அறுப்போம்; கையெல்லாம் நெருப்பு பட்ட மாதிரி எரியும்! எங்க சமூக மக்களுக்கு இதைவிட்டா வேற வேலை தெரியாது. கடன் வாங்கி அதை அடைக்க வருஷம் முழுக்க வேலை பார்த்து மறுபடியும் கடன், மறுபடியும் வேலைன்னு... இதுதான் எங்க உலகம். இந்த கொடுமையில இருந்து மீள படிப்பு ஒண்ணுதான் வழின்னு நம்பினேன். என் ஆசைக்காக என் தம்பியும், என் தங்கச்சியும் வேலைக்குப் போனாங்க. நான் எம்.எஸ்சி., - எம்.பில்., முடிச்சு இப்போ பிஎச்.டி., பண்ணிட்டு இருக்குறேன்; எம்.எஸ்சி.,யில கோல்டு மெடலிஸ்ட்! வலி சூழ் வாழ்க்கைரோஜா, மரூர் கிராமத்தின் முதல் பட்டதாரி. 'படிக்க வைச்சா தப்பு பண்ணுவா; எதுக்கு படிக்க வைக்கிறே?' என அடிக்கடி கேட்கும் கிராமத்து மனிதர்களிடமே தனக்காக கடன் வாங்கும் தந்தையின் மனவலியையும், மரம் ஏறி சம்பாதிக்கும் அவரது உடல்வலியையும் நன்கு உணர்ந்திருப்பதே ரோஜாவின் வைராக்கியத்திற்கான அடிப்படை!வயசு 26 ஆயிடுச்சு; எதுக்காக இன்னும் படிச்சிட்டே...?'என் குடும்பம் மட்டும் முன்னேறினா போதும்'னு நினைச்சிருந்தா, எனக்கு ஒரு பட்டப் படிப்பும் ஒரு வேலையும் போதுமானதா இருந்திருக்கும். ஆனா, 'ரோஜா அக்கா மாதிரி நானும் படிக்கணும்'னு என் சமூக குழந்தைகள் ஆசைப்படணும். அதான், இன்னும் இஷ்டத்தோட படிக்கிறேன்!நம்ம அரசுக்கு ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?கல்வியால மட்டும்தான் மக்களோட தலையெழுத்து மாறும்; அதனால, தரமான கல்வியை எல்லாருக்கும் சமமா கொடுங்க.