இப்படித்தான் வாழ்கிறேன்!
வணக்கம், நான் மோ.நிவேதா; கோவை, கே.பி.ஆர்., ஆலையில் கடந்த 4 ஆண்டுகளா முழுநேர தொழிலாளி; கே.பி.ஆர்., பெண் பணியாளர் கல்வியியல் பிரிவில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பகுதிநேர மாணவி; சொந்த ஊர் நீலகிரியின் கூடலுார்.* சமீபத்தில் நிறைவேறிய நிவேதாவின் நீண்டகால ஆசை?'பலுாடா' சாப்பிட்டேன்; நல்லா ருசியா இருந்தது!* இரவு நேரத்துல 'செல்போன்' பயன்பாடு?இரவு 9:00 மணிக்கு மேல அதை எடுத்தது கிடையாது!* ஆங்கிலம் பேசுவீங்களா?ஆங்கிலம் புரிஞ்சுக்குவேன்; ஓரளவுக்கு பேசுவேன்; ஹிந்தி தெரியும்!* ஆண்டுக்கு எத்தனை வெளியூர் பயணம்?சென்னைக்கு இரண்டு தடவை வந்திருக்கேன்; அவ்வளவுதான்!* உங்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவது யார்?என் சம்பாத்தியத்துல எனக்குத் தேவையானதை நானே வாங்கிக்கிறேன்!எங்க வீட்ல மூணும் பெண் குழந்தைகள்; அக்கா, நான், தங்கச்சி மூணு பேருமே பிளஸ் 2 முடிச்ச கையோட இங்கே வந்துட்டோம். பி.சி.ஏ., படிப்புல தங்கப்பதக்கம் வாங்கின சந்தோஷத்தைவிட, என் பெற்றோர் மோகன்ராஜ் - ஜெயசித்ராவை கடனாளி ஆக்காம 'பட்டம்' வாங்கினதுல ரொம்பவே சந்தோஷம்!வருத்தமும் நிறைவும்கல்லுாரி பேருந்துல பொண்ணுங்க சிரிச்சு பேசிட்டு போறதைப் பார்க்குறப்போ... வகுப்பறை, நண்பர்கள், நுாலகம், கேன்டீன், சுற்றுலான்னு இருக்குற அந்த வாழ்க்கை மேல ஆசை வரும்! ஞாயிற்றுக்கிழமை வகுப்புக்கு போறப்போ, நானும் அந்த வாழ்க்கை வாழ்றதா கற்பனை பண்ணி சந்தோஷப்பட்டுக்குவேன்!என் வாழ்க்கை என் கையில்நாலு வருஷத்துக்கு முன்னாடி இங்கே சேர்ந்த புதுசுல, 'மில் தொழிலாளியாவே நம்ம வாழ்க்கை போயிருமோ'ன்னு பயம் இருந்தது. இப்போ, இந்த படிப்பு எனக்கு பெரிய தன்னம்பிக்கையை கொடுத்திருக்கு! 'எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம்; என்னோட எதிர்பார்ப்பு இதுதான்'னு சொல்ற உரிமை கிடைச்சிருக்கு!ஆற்றல் தரும் அனுபவம்ஒரு வேலையை உண்மையா செய்றப்போ அது நமக்கு வாழ்க்கைப் பாடத்தை சொல்லித் தரும். 'செய்த தவறை திருத்திக் கொள்ள முயற்சி செய்; அந்த தவறு குறைந்தபட்சம் அடுத்த ௬ மாதங்களுக்கு மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்; அதன்பின் அது நிகழாது!' - இது என் அனுபவப் பாடம்!'மில் - விடுதி'ன்னு மட்டுமே பழக்கப்பட்டு இருக்கீங்க; எதிர்கால திட்டம்...?'நாளிதழ்' வாசிக்கிற பழக்கம் இருக்குறதால சில செய்திகள் பயம் தருது! ஆனாலும், 'தாஜ்மஹால், தஞ்சை பெரிய கோவில் பார்க்கணும்; கார் ஓட்டணும்; எம்.சி.ஏ., முடிக்கணும்; கல்லுாரி பேராசிரியை ஆகணும்'னு மனசுல நிறைய திட்டங்கள் இருக்கு.