ஞான் பிரகாஷன் (மலையாளம்)
'உடம்பு முடியாத அம்மாவை பார்த்துக்கிறதும், பள்ளிக்கு போற தம்பி, தங்கையை படிக்க வைக்கிறதும் எந்த வகையில பாரமாகும்; நான் என்ன அவங்களை தலையிலேயா சுமந்துட்டு இருக்குறேன்?'என் கேள்விக்கு பிரகாஷன் பதில் சொல்லலை; லேசா சிரிச்சார்.'மேடையில, சார்லி சாப்ளின் ஒரு ஜோக் சொல்றார். கூட்டம் வெடிச்சு சிரிக்குது. மறுபடியும் அதே ஜோக்கை சொல்றார். கூட்டம் அவ்வளவா ரசிக்கலை. மூணாவது தடவையும் அதே ஜோக்கை சொல்றார். கூட்டம், வெறுப்பா பார்க்குது. அப்போ, சாப்ளின் கேட்டாராம்... 'ரசிச்சு சிரிச்ச நகைச்சுவைக்கே மூணாவது தடவை சிரிப்பு வரலைங்கும் போது, எப்பவோ நடந்த சோகத்தை நினைச்சு ஒவ்வொரு தடவையும் நாம ஏன் அழணும்?'பிரகாஷன் முகத்துல பிரகாசம். இதுநாள் வரை அறியாத ஒண்ணை புரிஞ்சுக்கிட்ட சந்தோஷம்.'நல்லா புரிஞ்சுக்கோங்க... இந்த உலகத்துல, வாழ்றது ரொம்ப சுலபம்; என்ன ஒண்ணு... மத்தவங்க மாதிரி வாழணும்னு ஆசைப்பட்டா தான் செலவும், சிரமமும்!'ஆச்சரியமா என்னைப் பார்த்த பிரகாஷன் முகத்துல, இன்னும் வடியாத புன்னகை. சந்தோஷமா சொன்னார்...'தேங்க்ஸ் ஸ்ருதி'