இதயத் திருடி!
கோவிந்தன் - ராசம் தம்பதியின் மூத்த மகள் சுமித்ரா.'அடுத்தடுத்து புள்ளைங்க உக்காரும்போது, பெரியவளை சபிச்சு கொட்டிடுறேன். அவ திருப்பி ஒரு வார்த்தை, 'அதுக்கு நான் என்ன பண்ண முடியும்'னு கேட்டுட்டா கூட பரவாயில்லை. அமைதியா போய் கிணத்தடியில உட்கார்ந்துக்கிறா!'மனைவியின் நிலையை கோவிந்தனால் புரிந்து கொள்ள முடிந்தது. அடுத்தடுத்து நான்கு பிள்ளைகளை பெற்றுப் போட்ட ராசத்திற்கு, மூத்தவள் தனக்கு இணையாக முதிர்ந்து வீட்டை வளைய வருவது நெருக்குதலை அளிக்கிறது!சுமித்ராவின் ஜாதகம் இப்போது ஜோதிடர் கையில்!புரட்டிய நொடியே, 'இந்த பொண்ணு... இந்த பொண்ணு இந்நேரம்...' உணர்ச்சிகளற்ற அவரது முகம் கோவிந்தனை பயமுறுத்த, விடுவிடுவென வீட்டிற்கு விரைந்தார்.இருட்டிக் கிடந்தது வீடு. உள்ளே யாரும் இல்லை. கிணற்றடிக்கு பாய்ந்தார். கடைக்குட்டியுடன் நின்று கொண்டிருந்தாள் சுமித்ரா. ததும்பும் விழிகளுடன் அவர் அவளைப் பார்க்க...'ஏம்ப்பா... செத்துடுவேன்னு பயந்துட்டியா...' மின்னும் கண்களுடன் கேட்டாள்.தன் மனம் படித்த மகளின் பாசத்தில் உயிர் உணர்ந்தார் அப்பா.படைப்பு: சுமித்ரா ('ராக்கெட் தாதா' சிறுகதை தொகுப்பு)எழுதியவர்: ஜி. கார்ல் மார்க்ஸ்பதிப்பகம்: எதிர் வெளியீடு